இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
Tamil New Sex Stories – அப்புறம் ஓரிரு நிமிடங்களுக்கு அவர்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அவர்களுக்குள் நிலவிய அந்த இறுக்கத்தின் பிடியில் சிக்குண்டு இருந்தார்கள். எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் அசோக் பெஞ்சில் இருந்து மெல்ல எழுந்தான்.
“ஓகே ப்ரியா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் கெளம்புறேன்..!!”
என்றவாறு ப்ரியாவின் பதிலை எதிர்பாராமல் நடக்க ஆரம்பித்தான். அவனுடைய முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ப்ரியா, திடீரென மனதில் ஏதோ தோன்றியவளாய் அவனை அழைத்தாள்.
“அசோக்.. ஒரு நிமிஷம்..!!”
“என்ன..??” அசோக் திரும்பிப் பார்த்து கேட்டான்.
“அந்த லாகின் பேஜ் இஷ்யூ.. நீதான பாத்துட்டு இருக்குற..??”
“ஆமாம்..!!” அசோக் குழப்பமாகவே சொன்னான்.
“உன் சீட்டுக்கு போனதும்.. அந்த இஷ்யூவை நீ எப்போ முடிப்பேன்னு.. எனக்கு ஒரு எஸ்டிமேட் அனுப்பு..!! சரியா..??”
ப்ரியா ஒருமாதிரி கண்களை இடுக்கி அவனை பார்த்தவாறு, ஒருவித அதிகாரத் தொனியுடன் அவ்வாறு சொன்னாள். அவள் டெக்லீட் ஆனதும் முதன் முறையாக போடுகிற உத்தரவு..!! அதுவும் அவள் கொள்ளை கொள்ளையாய் அன்பு வைத்திருக்கிறவனை பார்த்து ஆணவத்துடன் தொடுத்த உத்தரவு..!!
அவள் அவ்வாறு சொன்னதும் அசோக் அப்படியே அதிசயித்துப் போனான். ப்ரியாவை ஒருமாதிரி நம்பமுடியாத பார்வை பார்த்தான். என்ன சொல்வதென்று தெரியாமல் ஒருகணம் தடுமாறினான். அவனுடைய தடுமாற்றம் ப்ரியாவுக்கு புன்னகையை வரவழைத்தது. அவளையும் மீறி அந்த புன்னகை அவளது உதட்டின் வழியே வெளிக்கசிந்தது. ‘நான் இப்போது உனக்கு பாஸாக்கும்..’ என்பது மாதிரி திமிராக புன்னகைத்தாள்..!!
அசோக்கின் தடுமாற்றம் ஒரு சில வினாடிகளுக்குத்தான்..!! அவனும் உடனே அவனது நிலைமையை சமாளித்துக்கொண்டு, ப்ரியாவை நோக்கி பதிலுக்கு ஒரு புன்னகையை வீசினான். அப்புறம் மெல்ல நடந்து சென்று அவளை நெருங்கினான். சற்றே குனிந்து, தனது முகத்தை அவளுடைய முகத்துக்கு அருகே எடுத்து சென்று புன்னகை மாறாத முகத்துடனே சொன்னான்.
“எஸ்டிமேட்தான..?? அதுக்கெதுக்கு சீட்டுக்கு போகணும்..?? இங்கயே சொல்றேன்..!!”
“இ..இங்கயா..??” அசோக்கின் புன்னகை ப்ரியாவை சற்றே மிரள செய்திருந்தது.
“ஹ்ம்ம்..!! சொல்றேன்.. நோட் பண்ணிக்கோங்க.. இன்னும் பத்து நாள் ஆகும்..!!”
“பத்து நாளா..?? அவ்ளோ நாள் எதுக்கு..??” ப்ரியா நெற்றியை சுருக்கினாள்.
“அது கொஞ்சம் காம்ப்ளிகேட்டடான இஷ்யூ.. ஸோ.. பத்து நாள் ஆகும்..!! இல்ல.. உங்களுக்கு ஏதாவது ஈசியான வழி தெரியும்னா.. கொஞ்சம் அனலைஸ் பண்ணி சொல்லுங்க.. எஸ்டிமேஷனை மாத்திக்கலாம்..!! என்ன சொல்றீங்க..??”
அசோக் அந்த மாதிரி கிடுக்கிப்பிடி போடவும் இப்போது ப்ரியா தடுமாறினாள். அவனையே சில வினாடிகள் மிரட்சியாக பார்த்தவள், அப்புறம் தனது தடுமாற்றத்தை சமாளித்துக் கொண்டு சொன்னாள்.
“ஓகே.. இட்ஸ் ஓகே..!! எனக்கு இப்போ அதுக்குலாம் டைம் இல்ல.. உன்னால எப்போ முடிக்க முடியுதோ.. அப்போவே முடி..!!”
என்று அசோக்கின் வழிக்கு வந்தாள். இப்போது அசோக்கின் புன்னகை மேலும் பெரிதானது. ‘அது.. அந்த பயம் இருக்கணும்..!!’ என்று வாய்விட்டு சொல்லவில்லை அவன். ஆனால் மனதுக்குள் நினைத்துக்கொண்டே, அந்த இடத்தை விட்டு கிளம்பினான். அவன் ஸ்டைலாக போவதையே ப்ரியா திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். ‘எல்லாருக்கும் ஒரு வீக்னஸ் இருக்கு ப்ரியா..!!’ என்று அசோக் எப்போதோ சொன்னது ப்ரியாவுக்கு இப்போது ஞாபகம் வந்தது..!!
அத்தியாயம் 10
அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்று சொல்வார்கள் இல்லையா..?? அடைகிற அவமானம் கூட சில நேரங்களில் அத்தகைய உதவியை செய்யக்கூடும்..!! யாருக்குமே தன்மானம் என்பது மிகவும் உன்னதமான விஷயம்..!! அந்த தன்மானத்தை சீண்டுகிற மாதிரியான சம்பவம் நடக்கிறபோது.. அழுகை வரலாம்.. ஆத்திரம் வரலாம்.. ஆனால் அதையெல்லாம் விட தனது நிலையை உயர்த்திக் காட்டவேண்டும் என்ற ஒரு வேகம் வர வேண்டும்..!! ஆன்சைட் சென்று அவமானப்பட்டு திரும்பியபோது கோவிந்திற்கு ஒரு வேகம் வந்ததே.. தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று.. அது மாதிரி..!! அத்தகைய ஒரு வேகத்தையே அசோக் அள்ளி வீசிய வார்த்தைகள் ப்ரியாவுக்குள்ளும் ஏற்படுத்தின..!!
அதன் பிறகு வந்த நாட்களில் அந்த வேகமே ப்ரியாவை உந்தித் தள்ளியது. தனது திறமையால் டெக் லீட் பதவி தன்னை தேடி வரவில்லை என்பதை அவள் நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தாள். ஆனால் இப்போது அந்த பதவி தானாக வந்த பிறகாவது, அதற்கேற்ற திறமையை வளர்த்துக் கொள்வதன் மூலம், எல்லாவற்றையும் சரிக்கட்டிவிட முடியும் என்றே நம்பினாள். கம்யூனிகேஷன் ஸ்கில், பிரசன்டேஷன் ஸ்கில் போன்ற சாஃப்ட் ஸ்கில்ஸ்களில் அவள் எப்போதுமே கில்லாடிதான். டெக்னிகல் ஸ்கில்ஸ்தான் அவளது பலவீனம். அந்த திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் அவளது முதல் குறிக்கோளாக இருந்தது.
ப்ரியா நினைத்தை முடிக்க நிறைய முயற்சிகள் எடுத்துக்கொண்டாள் என்றுதான் சொல்லவேண்டும். தான் எந்தெந்த டெக்னாலஜிகளில் வீக் என்பதை முதலில் பட்டியல் இட்டுக் கொண்டாள். அவர்கள் கம்பனியில் அந்த டெக்னாலஜிகளில் எங்காவது ட்ரெயினிங் நடந்தால், தேடிப்பிடித்து தன்னை நாமினேட் செய்து கொண்டாள். மிகவும் சின்சியராக அந்த ட்ரெயினிங் எல்லாம் அட்டன்ட் செய்தாள். சில ஆன்லைன் டெக்னாலஜி ஃபோரம்களில் உறுப்பினர் ஆகிக்கொண்டாள். அங்கு நடக்கிற விவாதங்களை ஒதுங்கி நின்று கவனித்தாள். நிறைய கற்றுக்கொண்டாள்.. சில புரியாத விஷயங்களை மனப்பாடம் செய்தாவது மனதில் நிறுத்திக் கொண்டாள்..!!
வீட்டிலும் எந்த நேரமும் புத்தகமும் கையுமாகவே அலைந்தாள். டிவி, ஆவி, ஜூவி எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு டிஸ்டன்ஸில் வைத்தாள். ‘நாலு விஷயங்களை பத்தி தெரிஞ்சுக்குறது தப்பே இல்ல..!!’ எனும் தனது கோட்பாட்டை சற்றே மாற்றி அமைத்துக் கொண்டாள். இப்போதைய தனது குறிக்கோள், தேவையான விஷயங்களில் தெளிவான அறிவு பெறுவதுதான் என்பதை நன்கே உணர்ந்திருந்தாள். மகளுடைய இந்த மாற்றத்தை வரதராஜன் வியப்பாக பார்த்தார். கண்விழித்து படிக்கிற மகளுக்கு காபி ஆற்றியவாறே வந்தவர், அவள் அமர்ந்திருந்த டேபிள் மீது விரிந்து கிடந்த மூன்று தடி தடி புத்தகங்களை பார்த்து மலைத்துப் போனார். மூன்று புத்தகங்களிலும் மாறி மாறி பார்வையை வீசுகிற மகளை பிரமிப்பாகவும், சற்றே கவலையாகவும் பார்த்தார்.
“என்னம்மா இது.. ஒரே நேரத்துல மூணு புத்தகத்தை வச்சு படிச்சுட்டு இருக்குற..??”
“ஆமாம் டாடி.. இதுல இருக்குறது அதுல இருக்காது.. அதுல இருக்குறது இதுல இருக்காது..!! ஆனா நம்ம மண்டைக்குள்ள மட்டும்.. எல்லாம் இருக்கணும்..!!” ப்ரியா சலிப்பாக சொன்னாள்.
“ஹ்ம்ம்.. இப்போலாம் டெயிலி இப்படி விழுந்து விழுந்து படிக்க ஆரம்பிச்சுட்ட..??”
“ஏன் டாடி.. படிக்க கூடாதா..??”
“இல்லம்மா.. காலேஜ் எக்ஸாம்க்கு கூட நீ இப்படி கண்ணு முழிச்சுலாம் படிச்சது இல்லையேன்னு கேட்டேன்..??”
மகள் மீது இருக்கும் அன்பில் வரதராஜன் சீரியசாக கேட்க, ப்ரியாவோ அந்த வாய்ப்பை கூட ஸீன் போட உபயோகித்துக் கொண்டாள்.
“ஹையோ.. காலேஜ் எக்ஸாமும் இதுவும் ஒன்னா டாடி ..?? டெக் லீட் பொசிஷன் எவ்வளவு கஷ்டம் தெரியுமா.. எத்தனை மீட்டிங் அட்டன்ட் பண்ணனும் தெரியுமா.. எத்தனை பேரை சமாளிக்கணும் தெரியுமா..?? எக்யுப்டா இருக்கணும் டாடி.. இல்லனா ஏமாத்திருவாங்க..!!”
“எகுப்னா..??” வரதாராஜன் தலையை சொறிந்தார்.
“ஷ்ஷ்ஷ்ஷ்..!! ஆயத்தமா இருக்கணும்னு அர்த்தம்..!! போருக்கு போறதுக்கு முன்னாடி.. இந்த கத்தியை நல்லா தீட்டிட்டு போறாங்கல்ல.. அந்த மாதிரி..!!”
“ஓ..!!!!”
“ப்ச்.. உங்களுக்கு இதுலாம் புரியாது.. காபியை குடுத்துட்டு நீங்க போய் தூங்குங்க.. நான் கொஞ்ச நேரம் படிச்சுட்டு படுத்துக்குறேன்..!!”
சலிப்பாக சொல்லியவாறே அவர் கையிலிருக்கும் காபியை ப்ரியா பிடுங்கிக்கொண்டு அவரை விரட்டினாள். எத்தனையோ பேரை சமாளிக்கவேண்டும் என்று ப்ரியா அப்பாவிடம் சொன்னாலும், அவளுடைய எய்ம் எல்லாம் ஒருவனை சமாளிப்பதில்தான் இருந்தது. அசோக்..!!!!
அவன் அன்று ப்ரியாவிடம் விட்ட சவாலின் பிறகு, இருவரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மோதிக் கொண்டார்கள். அவர்கள் கைகோர்த்து ஒன்றாக சுற்றித்திரிந்தபோது, அவர்களுடைய மனதுக்குள் தூங்கிய குழந்தைத்தனமான குணங்கள், இப்போது வெளியே குதித்து எதிரும் புதிருமாக சண்டையிட்டன. அற்பத்தனமாய்.. முதிர்வில்லா பிள்ளைகளாய் முட்டிக் கொள்வார்கள்..!!
கேஃப்டீரியாவில் மதிய உணவு அருந்துகையில் ஒரு நாள்..
டீமில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஒரு மீட்டிங் முடித்துவிட்டு ப்ரியா சற்று தாமதமாகத்தான் வந்தாள். அவள் அவசரமாக வருவதையே அசோக் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான். கையில் ஆவி பறக்கிற நூடுல்ஸ் தட்டுடன் வந்த ப்ரியா, அந்த டேபிளில் காலியாக இருந்த அந்த ஒற்றை இருக்கை நோக்கி சென்றாள். பின்புறத்தை தடவிக் கொண்டிருந்த துப்பட்டாவை விலக்கிவிட்டு அவள் உட்கார முனைய, அசோக் அந்த தருணத்துக்காகத்தான் காத்திருந்தவன் போல, தனது வலது காலை நீட்டி அந்த சேரில் வைத்து, ப்ரியாவை அமரவிடாமல் செய்தான். அவள் இப்போது வெடுக்கென திரும்பி கடுப்புடன் இவனை முறைத்தாள். இவனோ கூலாக..
“ஒய்.. என்ன முறைக்கிற..??” என்று போலிக்கோபம் காட்டினான்.
“காலை எடுடா..!!” ப்ரியாவின் குரலில் உடனடியாகவே ஒரு உஷ்ணம்.
“முடியாது..!! இதெல்லாம் டெவலப்பர்ஸ் க்ரூப்.. டெக்லீட்க்குலாம் இங்க சீட் இல்ல.. வேற எங்கயாவது ஓடிப்போ..!!”
“நான் எதுக்கு வேற எங்கயும் போகணும்..?? டெக்லீட் ஆனா என்ன.. டெலிவரி மேனேஜர் ஆனா என்ன..?? நான் எப்போவும் இந்த க்ரூப்ல ஒருத்திதான்..!!”
“ஹாஹா.. நீயா அப்படி சொல்லிக்கிறதா..?? நீ இந்த க்ரூப்ல இருக்கியா இல்லையான்னு நாங்க சொல்லணும்..!! உன் க்ரூப் எது தெரியுமா..? ஆங்.. அங்க பாரு.. தனியா உக்காந்து சாப்புட்டு இருக்காரு.. பாலா..!! அவர்தான் உன் க்ரூப்.. போ.. அவர்கூட போய் ஜாயின் பண்ணிக்கோ.. அப்படியே கம்பனி குடுக்குறேன்ற சாக்குல அவரை நல்லா காக்கா புடி.. அடுத்த ப்ரோமோஷனுக்கு ரொம்ப யூஸ் ஆகும்..!!”
அசோக் கேலியாக சொல்ல, ப்ரியா கண்களை இடுக்கி அவனை முறைத்தாள். அசோக் அந்த மாதிரி ப்ரியாவை சீண்டுவது அடுத்தவர்களுக்கும் எரிச்சலை உண்டாக்கியது. அனைவரும் ப்ரியாவுக்கு சப்போர்ட் செய்தார்கள். ‘ஏய்.. ஏண்டா இப்படி பண்ணுற.. அவளை உக்கார விடுடா..’ என்று ஆளாளுக்கு அசோக்கிடம் சலிப்பாக சொன்னார்கள். கோவிந்த் கூட ‘பாஸ்.. பா..பாவம் பாஸ்.. காலை எடுங்க ப்ளீஸ்..’ என்று கெஞ்சினான். அசோக்கோ ‘ப்ச்.. சும்மா இருங்க எல்லாம்.. அவ ஏதோ பாசக்காரி மாதிரி நடிக்கிறா.. நீங்களும் அதை நம்பிக்கிட்டு..’ என்று காலை எடுக்க மறுத்தான்.
“இப்போ காலை எடுக்கப் போறியா.. இல்லையா..??” ப்ரியா பற்களை கடித்தவாறு இப்போது பொறுமை இல்லாமல் கேட்க,
“முடியாது.. என்ன பண்ணுவ..??” அசோக் எகத்தாளமாக கேட்டான்.
ப்ரியா ஒரு சில வினாடிகள் அசோக்கை எரித்துவிடுவது போல முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் கையிலிருந்த நூடுல்சில் செருகியிருந்த ஃபோர்க்கை பிடுங்கி, அசோக்கின் தொடையில் ஓங்கி ஒரு குத்து குத்தினாள். அசோக் உடனே ‘ஆஆஆஆஆ…!!’ என அலறிக்கொண்டு சேர் மீதிருந்த காலை அவசரமாக எடுத்தான். அந்த கேப்பில் ப்ரியா அந்த சேரில் அமர்ந்து கொண்டாள். அசோக் தொடையை தடவியவாறு ‘ஷ்ஷ்ஷ்ஷ்…’ என்று வலியில் துடிக்க, அனைவரும் அவனை பார்த்து வாயில் உணவுடன் சிரித்தனர். ப்ரியா அவசர அவசரமாக நூடுல்ஸ் அள்ளி வாய்க்குள் போட்டு குதப்பிக்கொண்டே அசோக்கை பார்த்து சொன்னாள்.
“நா இங்க்தா உக்காந் சாப்புவேன்.. நீ வேணா எங்கா போ..!!”
“ஆஆஆஆ.. ரத்தம் வருதுடி.. ராட்சசி..!!”
“வதத்தும் வதத்தும்.. நல்லா வதத்தும்..!!” நூடுல்சை அசை போட்டவாறே ப்ரியா சொன்னாள்.
“பேய்.. பிசாசு.. காட்டேரி..!!”
அப்புறம் அன்று சாப்பிட்டு முடிக்கும் வரை அசோக் அவளை திட்டிக்கொண்டே இருந்தான். அவன் இந்த மாதிரியெல்லாம் ப்ரியாவை சீண்ட சீண்ட, அவள் உள்ளுக்குள் பொறுமிக்கொண்டே இருந்தாள். அந்த பொறுமலை அடக்க முடியாமல் ஒருநாள்..
‘வேலை எப்படிடி போகுது ப்ரியா..?’ என்று நண்பி ஒருத்தி அவளுடைய ஃபேஸ்புக் முகப்பு சுவற்றில் கிறுக்கி வைக்க.. ‘ஒரு ஈகோ புடிச்ச பய இம்சை பண்ணிட்டே இருக்காண்டி.. அவனுக்கு வைக்கிறேன் பாரு ஆப்பு..!!’ என்று இவளும் பதிலுக்கு கிறுக்கி வைத்துவிட்டாள்..!! ப்ரியாவுடைய நடவடிக்களை நோட்டமிட்டுக்கொண்டே இருக்கும் அசோக்கிற்கு, அடுத்த நாளே அந்த கிறுக்கல் கண்களில் பட்டுவிட்டது. டென்ஷன் ஆகிப் போனான்.
“என்னைத்தான ஈகோ புடிச்ச பயன்னு சொல்லிருக்குற..??” என்று ப்ரியாவிடம் சென்று எகிறினான்.
“உ..உன்னலாம் ஒன்னும் சொல்லல.. உ..உலகத்துல நீ ஒருத்தன்தான் ஈகோ புடிச்ச பயலா..?? நான் நம்ம QA மேனேஜரை சொன்னேன்..!! போ.. போ.. போய் வேலையை பாரு போ..” என்று திருதிருவென விழித்தவாறு ப்ரியா சமாளித்தாள்.
அன்று இரவு அசோக்கின் வீட்டில்.. டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்த செல்வி.. ஹீரோயினின் கணவனை ‘சாப்பாட்டுல போய் கோவத்தை காட்டுறானே.. சரியான ஈகோ புடிச்ச பய..!!’ என்று திட்டிவிட.. ‘இப்போ என்னைத்தான சொன்னீங்க.. என்னைத்தான சொன்னீங்க..?’ என்று ஆக்ரோஷமாக கத்தியவாறே, சாப்பிட்டுக்கொண்டிருந்த அசோக் அண்ணியிடம் சண்டைக்கு பாய்ந்தான்..!! புருஷனிடம் அறை வாங்கிவிட்டு கேமராவை பார்க்கும் அந்த ஹீரோயின் போலவே, செல்வி மிரண்டு போய் இவனை பார்த்தாள்..!!
அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை.. ப்ரியா தனது கல்லூரித்தோழி ஒருத்தியுடன் ஃபோரம் மால் சென்றிருந்தாள். PVR சினிமாஸில் டிக்கெட் வாங்குவதற்கு அந்த தோழி வரிசையில் நின்றிருக்க.. இவள் வெறுமனே கையைக்கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் தூரத்தில் ஐஸ்க்ரீம் சுவைத்துக் கொண்ருந்த அசோக் இவளுடைய கண்ணில் பட்டான். அவனை பார்த்ததும் பரவசமாகிப் போன ப்ரியா, அவசரமாக நடந்து சென்று அவனை நெருங்கினாள்.
“ஹாய் அசோக்.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?”
என்று பற்களை காட்டி இளித்தவாறே அவனது பக்கத்தில் சென்றதும்தான்.. அவனுடைய பனியனில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம்.. பளிச்சென அவளுடைய கண்களை தாக்கியது..!!
“MY BOSS IS A STUPID..!!”
அதை வாசித்ததுமே ப்ரியா வாயை ‘ஓ’வென திறந்து திகைத்தாள். சுர்ரென கோவம் வந்தது அவளுக்கு. அவளுடைய குளிர் நிலா முகம், இப்போது அனல் நெருப்பை அள்ளி வீசியது. அகோரமாய் மாறிப்போயிருந்தது. ‘இந்த மாதிரி ஒரு டி-ஷர்ட்டை போட்டுக்கொண்டு ஊர் சுற்றி, மறைமுகமாக என்னை கேவலப் படுத்துகிறானா இவன்..??’. ஆசையுடன் அவனை நெருங்கியவள், இப்போது ஆத்திரமாக சீறினாள்.
“ஏண்டா.. நான் ஸ்டுபிடா..?? நான் ஸ்டுபிடா..??”
அவனுடைய டி-ஷர்ட்டை கொத்தாகப் பற்றி கத்தினாள். அசோக் ப்ரியா மாதிரி சமாளிக்கவெல்லாம் முயற்சி செய்யவில்லை. அலட்சியமான குரலில் நேரடியாகவே பதில் சொன்னான்.
“தெளிவாத்தான எழுதிருக்கு.. என் பாஸ் ஒரு ஸ்டுபிட்னு..!! நீ என் பாஸ்தான..??”
“யூ.. யூ…” என்று ப்ரியா அவனை திட்ட வார்த்தை இல்லாமல் திணறிக் கொண்டிருக்கையிலேயே..
“ஹேய்.. காட் த டிக்கெட்ஸ்யா.. சலோ..!!” என்றவாறு அந்த தோழி இவர்களை நெருங்கினாள். நெருங்கியவள் அசோக்கை பார்த்து குழப்பமாகி..
“இ..இது யாரு..??” என்று ப்ரியாவை கேட்டாள்.
“எ..என் கூட வொ..வொர்க் பண்றவரு..!!” வெறுப்பாகவும், தடுமாற்றமாகவும் சொன்னாள் ப்ரியா. உடனே அசோக் பல்லிளித்துக் கொண்டே ஆரம்பித்தான்.
“இப்படி மொட்டையா சொன்னா எப்படி..?? இவங்க லீடா இருக்குற டீம்ல நான் ஒரு ப்ரோக்ராமர்.. ஆபீஸ்ல இவங்கதான் என் பாஸ்..!!”
என்று குறும்புடன் சொன்னவாறே, தனது நெஞ்சை விரித்து காட்டி.. அதில் எழுதியிருந்த வாசகத்தை ப்ரியாவின் தோழிக்கு தெளிவாக காட்டினான்..!! அவனுடைய குறும்பு புரியாமல் ஓரிரு வினாடிகள் குழம்பிய அவள், அப்புறம் அந்த வாசகத்தை வாசித்ததும் குபுக்கென எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டாள். தோழியின் சிரிப்பு ப்ரியாவுக்கு மேலும் எரிச்சலை கிளப்பியது. கண்களை இடுக்கி.. காதுகளில் புகை வர.. அசோக்கை ஏறிட்டு முறைத்தாள்..!!
அன்று படம் பார்த்துவிட்டு ஸ்கூட்டியில் வீடு திரும்புகையில்.. சென்ட் ஜான்ஸ் சிக்னலில் காத்திருக்கையில்.. யாரோ யாரையோ ஸ்டுபிட் என்று அழைக்க.. இவள் ஹெல்மட் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டுவிட்டு.. அப்படியும் இப்படியுமாய் அரக்க பரக்க திரும்பி பார்த்தாள்..!! ‘ஹேய்.. சிக்னல் விழுந்துடுச்சுடி..’ என்று பின்னால் இருந்தவள் முதுகில் குத்தியதுந்தான், சிந்தனை திரும்பியவளாய் ஆக்சிலரேட்டரை முறுக்கினாள்..!!
அஃபிஷியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இந்த மாதிரி மாறி மாறி சீண்டிக் கொண்டார்கள் என்றால்.. அஃபிஷியலான விஷயங்களில் நேரடியாகவே மோதிக் கொண்டார்கள்..!! தன்னுடைய பலவீனத்தை அசோக் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான் என்பதை, ப்ரியா நன்றாக புரிந்து வைத்திருந்தாள். அசோக்கை சமாளிக்க அவனிடம் என்ன பலவீனம் இருக்கிறது என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. தனது பலம்தான் அவனது பலவீனம் என்பதை உணர்ந்து கொண்டாள். அவனுக்கு அவள் பாஸ் என்பதுதான் அவளுடைய பலம். அவனை சமாளிக்க அந்த பலத்தையே உபயோகிக்கலாம் என்று முடிவு செய்தாள்.
இருக்கிற வேலைகளை டீமில் எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பது.. அந்த வேலையில் உள்ள டெக்னிக்கல் சிக்கல்களை டீமில் இருப்பவர்கள் எடுத்து வந்தால் அதை தீர்த்து வைப்பது.. மதிப்பிட்ட நேரத்தில் அந்த வேலைகளை அவர்களிடமிருந்து முடித்து வாங்குவது.. இவைதான் ப்ரியாவின் மூன்றுவிதமான பிரதான வேலைகள்..!! இந்த மூன்றுவிதமான வேலைகளிலுமே அசோக்கிற்கும் ப்ரியாவுக்கும் பிரச்னை வரும்.. மூன்று விதமாக முட்டிக் கொள்வார்கள்..!!
தனக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வேலையில் அசோக்கிற்கு திருப்தி இருக்காது. தனது திறமைக்கு சவாலான வேலையாக இல்லை என்ற உணர்வு எழும். எரிச்சலாகிப் போவான். எழுந்து ப்ரியாவின் அறைக்குள் சென்று அவளுடன் சண்டை பிடிப்பான்.
“என்ன வொர்க் அலாட் பண்ணிருக்குற நீ..??” என்று உள்ளே நுழைந்ததுமே எரிந்து விழுந்தான்.
“ஏன்.. என்னாச்சு..??” ப்ரியாவும் முறைப்பாக கேட்டாள்.
“கவிதாவுக்கு போய் காப்ளிகேட்டடான இஷ்யூ அசைன் பண்ணிருக்குற.. எனக்கு ஒரு சப்பை இஷ்யூ..!! இதை பண்றதுக்கு நான் வேணுமா.. புதுசா ஜாயின் பண்ணிருக்குற ஃப்ரஷருக்கு குடுக்க வேண்டிய வேலைலாம் எனக்கு குடுத்திருக்குற..?? யாருக்கு எந்த வேலையை குடுக்கனும்னு கூட உனக்கு தெரியல.. இதான் நீ டீமை லீட் பண்ற லட்சணமா..??” அசோக் அவ்வாறு அவளது திறமையை கேலி செய்யவும், ப்ரியாவுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. சீற்றமாக சொன்னாள். Chinna Koothi Tamil New Sex Stories
– தொடரும்
ஐ ஹேட் யூ பட் – 17
இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.